Order a Free Book of Yatharth Geeta on https://www.yatharthgeeta.com/order-a-free-book/
கீதையை உபதேசிக்கும்போது, பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் உள்ளகிடக்கை மற்றும் உணர்ச்சிகள் என்னவாக இருந்தன? அவரது ஆழ்மன உணர்ச்சிகளை வெறும் வார்த்தைகளால் நம்மால் விவரிக்க இயலாது. சிலவற்றை வார்த்தைகளாலும் மேலும் சிலவற்றை உடல் மொழிகளாலும் வெளிப்படுத்த இயலும். மீதம் உள்ளவற்றை எவரேனும் உணர முற்பட்டால் அவர்கள் தங்கள் தங்கள் சொந்த அனுபவங்கள் மூலமே பெறமுடியும். கீதையின் தாத்பரியத்தை உணர வேண்டும் என்றால் ஒன்று அவர்கள், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் உன்னத நிலையை அடைந்தவர்களாய் இருத்தல் வேண்டும் இல்லையென்றால் பண்பு நலன்கள் மிகுந்த ஒரு ஆசிரியராக இருத்தல் வேண்டும். சுவாமிஜி, கீதையின் சுலோகங்களை வெறுமனே திரும்பத் திரும்ப சொல்லாமல் உண்மையில் கீதையின் தத்துவத்தை அனைவரும் உணரச் செய்திருக்கிறார். இது எப்படி சாத்தியமென்றால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதை உபதேசித்த போது என்ன மனநிலையில் இருந்தாரோ அந்த நிலையை சுவாமிஜி அடைந்து விட்டார். எனவேதான், அவரால் கீதையின் உண்மையான தத்துவத்தை தானும் உணர்ந்து நமக்கும் வழி காட்ட முடிகிறது. நம்முடைய ஆழ்மன உணர்வுகளைத் தூண்டி, நம்மை ஞானமார்க்கத்திற்கு அழைத்துச் செல்ல சுவாமிஜியால் முடிகிறது.
“வணக்கத்திற்குரிய ஸ்ரீபரமஹன்ஸ்ஜி மஹராஜ் ஒரு ஞான குருவாக தனது யதார்த்த கீதை நூலில், சொற்பொழிவுகள் மற்றும் அருளுரைகள் மூலம் கீதை குறித்த ஆழ்நிலை உணர்வுகளைத் தூண்டியிருக்கிறார்.” – சுவாமி அகடானந்தா
“யதார்த்த கீதை” என்னும் நூலின் ஆசிரியர் ஒரு துறவி, அவருக்கு மற்றவர்களைப்போல உலகியல் கல்வி கிடைக்கவில்லை. இருந்த போதும் அவர் தனக்கு கிடைத்த பண்பட்ட குருவின் கருணையால் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்டார். இது அவரின் இடைவிடாத தியானத்தின் மூலம் சாத்தியமாயிற்று. உயர்ந்த இடமான விண்ணுலக வாழ்வை அடைவதற்கு எழுத்து ஒரு தடை என்று சுவாமிஜி கருதினார். இருந்தாலும், அவர் காட்டிய வழிகள் இந்த ஆய்வுக் கட்டுரைக்குத் தூண்டுதலாக அமைந்துள்ளன. “யதார்த்த கீதை” என்ற இந்த சிறு நூலை எழுதாவிட்டால் பரமஹம்சர் இதுவரை பெற்ற உள்ளார்ந்த மனவலிமை யாவும் பயனற்றுப் போகும் என்று இறைவன் அவருக்கு குறிப்பால் உணர்த்தியிருக்கிறார். ஆரம்பத்தில் அவர் இந்த எண்ண ஓட்டத்தை தியானத்தின் மூலம் வெற்றிகொள்ள அனைத்து வழிகளையும் கடைபிடித்தார். ஆனால், இறுதியில் ஆண்டவன் கட்டளையே மேம்பட்டு இருந்தது. எனவேதான் இந்த “யதார்த்த கீதை” என்ற நூல் சாத்தியமாயிற்று. இந்த ஆய்வுக் கட்டுரையில் எங்கெல்லாம் குற்றம் குறை தென்பட்டனவோ அவற்றையெல்லாம் இறையருள் களைந்தது. “ஆன்ம அமைதியே முடிவில் அனைவருக்குமான அமைதி” -யாக உருப்பெறும் என்ற சுவாமிஜியின் கோட்பாட்டை முன்வைத்தே நாங்கள் இந்தப் புத்தகத்தை வெளியிடுகிறோம்.
அனைத்து சங்கராச்சாரியார்கள், மடாதிபதிகள், பிராமண மஹா சபையின் உறுப்பினர்கள் மற்றும் 44 நாடுகளைச் சேர்ந்த ஆன்மீக அறிஞர்கள் கலந்து கொண்ட இந்த “நூற்றாண்டின் கடைசி கும்பமேளா,” ஹரித்துவாரில் நடைபெற்றது. அவ்வமயம், உலக மத அமைப்பு (World Religious Parliament), சுவாஜிக்கு “விஷ்வ கௌரவ்” (Pride of the World ) என்ற விருதை அளித்துக் கௌரவித்தது.
10.04.1998 அன்று நடைபெற்ற இந்த நூற்றாண்டின் கடைசி கும்பமேளாவில், மனித இனத்திற்கான வேத நூலான ஸ்ரீமத் பகவத் கீதையின் உண்மையான பகுப்பாய்வாக சுவாமிஜி எழுதிய “யதார்த்த கீதை” என்ற இந்த நூலுக்கு, பாரத் கௌரவ் (Pride of India ) என்ற விருதை அளித்து கௌரவிக்கப் பட்டார்.
26.01.2001 அன்று காசியில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் சுவாமிஜி ஸ்ரீஅகடானந்தாவிற்கு அவரது யதார்த்த கீதை என்ற நூலுக்கும், சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டியும் உலக மத அமைப்பு “விஷ்வகுரு” (மனித குல குரு மற்றும் தீர்க்கதரிசி) என்ற விருதினை அளித்துக் கௌரவித்தது.
30.08.2007 அன்று ஷ்யாமல் ரஞ்சன் முகர்ஜி vs நிர்மல் ரஞ்சன் முகர்ஜி மற்றும் பலர் தொடர்ந்த W.P.No.56447 of 2003 என்ற வழக்கில் மேன்மைமிகு அலகபாத் உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. S.N.ஸ்ரீவத்ஸவா 30.08.2007 அன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கீழ்கண்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
“ஸ்ரீமத் பகவத் கீதை ஹிந்துக்களுக்கு மட்டுமான புனித நூல் அல்ல. அது ஒட்டுமொத்த மனித குலத்திற்குச் சொந்தமானது. கீதையில் கூறப்பட்டுள்ள செய்திகள் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் சொல்லப்படவில்லை. அவை அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்.”
சுவாமி அகடானந்தா மகராஜ் ஒரு சிறந்த இந்தியத் துறவி. அவர் எழுதிய “யதார்த்த கீதை,” இன, நிற வேறுபாடின்றி எல்லா மதத்தினருக்கும் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான அறம் மற்றும் அறநூலாகும்.
“யதார்த்த கீதை” என்ற இந்தப் புத்தகம் ஒலி வடிவமாக உலக மொழிகள் (ஆங்கிலம், ரஷ்யன், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், சைனீஸ், இத்தாலியன், நார்வேயன், டச்சு போர்த்துகீசு, அரபி, ஜப்பானீஸ், பெர்ஷியன், நேபாளி மற்றும் உருது) மற்றும் இந்திய மொழிகளிலும் (இந்தி, பெங்காலி, அசாமீஸ், குஜராத்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, ஒரியா, சிந்து. சம்ஸ்கிருதம், பஞ்சாபி) கிடைக்கும். மேலும், விபரங்களுக்கு http://yatharthgeetha.com/ என்ற வெப்சைட்டைப் பார்க்கவும்.
– ஸ்ரீபரமஹன்ஸ் சுவாமி அகடானந்ஜி ஆஷ்ரம் டிரஸ்ட்.